About Me

My photo
chennai, tamil adu, India
i am an innocent person but somebody ruined me ....

Friday, May 18, 2012


                கம்யூனிஸம் ஒரு சுருக்கமான அறிமுகம்


கம்யூனிஸம் உருவான வரலாறு
கம்யூனிஸக்கொள்கை என்பது ஆதிகாலம் முதலே பூமியில் உள்ளதுதான் என்று கம்யூனிஸ வாதிகளால் சொல்லப்பட்டாலும்  இன்று உலகில் நாம் காணும் கம்யூனிஸக் கொள்கையை உருவாக்கியவர் காரல் மார்க்ஸ் என்பவர்தான் கம்யூனிஸக் கொள்கைக்கு வடிவம் கொடுத்ததில் எங்கல்ஸ்சும் ஒருவர் தான் என்றாலும் இது விஷயத்தில் மார்க்ஸிற்க்குத் தான் அதிக பங்கு உள்ளது
கம்யூனிஸம் உருவாக்கத்திற்க்கான அடிப்படை ஆதாரங்கள்
கம்யூனிஸம் என்பது அறிவியல் ஆதாரங்களின் அடிப்பையிலோ அல்லது அனுபவப்பூர்வ அடிப்படையிலோ உருவாக்கப்பட்ட ஒன்றல்ல மாறாக முழுக்க முழுக்க தத்துவங்கள் எனும் கற்பனையான சிந்தனைச் சித்தாந்தங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு கொள்கையாகும் காரல்மார்க்ஸ் இந்தக் கொள்கைக்கு வடிவம் கொடுப்பதற்க்கான அடிப்படையக அமைந்த தத்துவங்கள் இரண்டாகும் ஒன்று ஹெகலின் கருத்தியல் கோட்பாட்டுத் தத்துவம் இரண்டாவது போயார்பாக்கின் பொருள் முதல்வாதத் தத்துவம் இவையிரண்டும் புரிந்து கொள்ள சற்று கடினமான தத்துவங்கள் (அந்தளவிற்க்கு முரன்பாடானவை) என்றாலும் முடிந்த அளவு எளிமையாக இங்கே தருகிறோம்
ஹெகலின் கருத்தியல் வாதம்(idealism)
ஹெகலின் கருத்தியல் அல்லது மெய்யியல் தத்துவத்தை இவ்வாறு விளங்கலாம் அதாவது கருத்துக்கள் என்பது தொடர்ந்து இயங்குவதும் பரஸ்பரம் முரன்பட்டதுமாகும் ஒரு பொருளைப் பற்றி ஒருவர் மனதில் தோன்றும் கருத்தானது(சிந்தனை) தெளிவாகப் புரியவேண்டும் என்றால் அந்தக்கருத்தின் மறுபுறமும் அவருடைய சிந்தனைக்கு எட்டவேண்டும் பரஸ்பரம் முரன்பட்ட எதிர் எதிர் கருத்துக்களுள் தொடர்ந்து நடைபெறும் மோதலினால் அவை எழுந்து வளர்ச்சியடைகின்றன அப்படி வளர்ச்சியடைந்ததனால் தான் இப்பிரபஞ்சமே உண்டானது  அதாவது இப்பிரபஞ்சம் உண்டாவதற்க்கு முன்பு வெறும் கருத்து absolute idea(மெய்யியல்) மட்டுமே உண்டாகியிருந்தது இப்படிப்பட்ட வெறும் கருத்தின் தொடர் எழுச்சியால் தான் இப்பிரபஞ்சம் உண்டானது கருத்தின் இந்த எழுச்சி அதன் முரன்பாட்டால் ஏற்பட்டாதாகும் சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆதியில் கருத்து தான் இருந்தது அந்தக் கருத்தின் முரன்பாட்டினால் அவை பரஸபரம் தொடர்ந்து மோதிக்கொண்டதால் அவை வளர்ச்சியடைந்து பிரபஞ்சமாகவும் அதில் உள்ள பருப்பொருட்களாகவும் மாறின என்பதுதான் கருத்தியல் அல்லது மெய்யியல் கோட்பாடு என்பதாகும் இந்தக்கோட்பாட்டின் தந்தைதான் கோர்க் வில்யம் ப்ரீட் ரிக் ஹெகல் இதற்க்கு ஆதாரமாக சில விஷயங்களை ஹெகல் சுட்டிக்காட்டுகின்றார்
போயார்பாக்கின் பொருள் முதல் வாதம்(philosophy)
போயார்பாக்கின் பொருள் முதல் வாத தத்துவம் ஹெகலின் மெய்யியல் தத்துவத்திற்க்கு நேர் எதிரானா தத்துவமாகும. போயார்பாக்கின் பொருள் முதல் வாத தத்துவத்தை இவ்வ்வாறு விளங்கலாம் அதாவது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக ஆதிகாலம் முதலே நிலைநிற்பது பொருள் மட்டுமே இயக்கமே பொருளின் அடிப்படைக் குனம் பொருளில் இருந்துதான் இயக்கமே உண்டாகின்றது நம்முடைய கருத்திற்க்கு முன்பே நாம் உண்டாகியிருந்தோம் .நாம் கருத்தின் படைப்பல்ல கருத்து(சிந்தனை) தான் நாம் படைப்பு. நாம் பிரபஞ்சத்தின் பாகமே பிரபஞ்சத்தின் பாகமான மனித மூலையின் செயல்களாலேயே கருத்து உருவானது மனித மூளை என்பது பருப்பொருளின் உருவமாற்றம் மட்டுமேயாகும் எனவே கருத்திற்க்கு முன்பே(மெய்யியல்) முன்பே பொருள் இருந்தது. கருத்து சிந்தனை புத்தி போன்ற எல்லாமே பொருளின் படைப்பேயாகும். இதுதான் போயார்பாக்கின் தத்துவம்
 இப்படி பரஸ்பரம் முரன்பட்ட இரு வெற்றுத் தத்துவங்களை ஒன்றாக இனைத்து அதன் அடிப்படையில்தான் மார்க்ஸும் எங்கல்சும் கம்யூனிஸ்ட் மானிபெஸ்ட்டோவை தயாரித்துள்ளார்கள். இந்த இரு தத்துவங்களின் அடிப்படையில்தான்  கம்யூனிஸத்தின் அடித்தளமே கட்டப்பட்டுள்ளது அதாவது கம்யூனிஸத்தில் கூறப்பட்டுள்ள இறைமறுப்பு பொருளாதாரக்கொள்கை பொதுவுடமைவாதம் தொடங்கி கம்யூனிஸத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் காரல்மார்க்ஸும் எங்கல்சும் இந்த அடிப்படை விதியிலேயேதான் தயாரித்துள்ளனர்
கம்யூனிஸத்தின் படித்தரங்கள்
கம்யூனஸம் மனித வரலாற்றை அதாவது உலகை ஐந்து கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கிறது 1 கம்யூனிஸம் மிருகத்திலிருந்து மனிதன் பரிணாமமடைந்த காலகட்டம். 2 அடிமைத்துவம் மனிதன் பிற மனிதனை அடிமையாக்கி வேலை வாங்கிய காலகட்டம். 3 ப்யூட்ரலிஸம் நிலப்பிரபுக்களுக்கும் சாதாரன குடிமக்களுக்கும் எழுந்த போராட்ட காலகட்டம். 4 முதலாளித்துவம் முதலாளி வர்க்த்திற்க்கும்  தோழிலாளி வர்க்த்திற்க்குமான போராட்ட காலகட்டம். 5 சோசலிஸம் தொழிலாளி வர்க்கப் பிரதிநிகள் தொழிலாளி வர்க்கத்திற்க்காக ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தெடுக்கும் காலகட்டம் இதன் பிறகு மீண்டும் ஆதி மனிமர்களிடம் நிலைநின்ற கம்யூனிஸம் அதன் பிறகு?
மார்க்கஸ் லெனின் சிறுகுறிப்பு
காரல்மார்க்ஸ் பிறப்பு 1818 மே ஐந்தாம் தேதி ஜெர்மனியில் உள்ள ரினிஸ் மாகானத்தில் ட்ரயர் என்ற ஊரில் பிறந்தார் போர்ன் மற்றும் பெர்லின் பல்கழைகலகங்களில் சட்டம் வரலாறு தத்துவம் போன்றவைகளைப் படித்து பட்டம் பெற்றார் தனது வாழ்கையையே கம்யூனிஸக்கொள்கைகளுக்காகச் சமர்ப்பனம் செய்த மார்க்ஸ் 1883 மார்ச் 14 தேதி லன்டன் நகரில் காலமானார்.
லெனின் 1870 ஏப்ரல் 22 ஸிம்பர்க்கில் பிறந்த அவரிடம் மார்க்ஸின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது தன்னுடைய இளமைக்காலம் முழுவதுமே கம்யூனிஸ்ப் பிரச்சாரத்திற்க்காகவே செலவு செய்த லெனின். 1917 நவம்பர் 6ம் தேதி உலகின் முதல் சோசலிஸ நாடாக ரஷ்யாவை உருவாக்கினார் இறப்பு1924 ஜனவரி  21ம் தேதி

No comments:

Post a Comment